Know the products – Part 6(பகுதி 6)

Print Friendly, PDF & Email

Click here to jump to English version

தமிழ் பதிவு படித்திட கீழே தொடரவும்

இயற்கை வேளாண்மைக்கு தேவையான பொருட்கள்  – பகுதி 6

எலும்பு உணவு: எலும்பு உணவு என்பது மிகவும் நுட்பமான மற்றும் பருவெட்டான வகையில் அரைக்கப்பட்ட பிராணிகளின் எலும்புக்கலவையே. பெரும்பாலும் இது இறைச்சிக்காகக் கொல்லப்படும் மாடுகளின் எலும்பு. இதில் எரியச்சத்தும் இன்ன பிற ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளன. எலும்பு உணவு மெல்ல வெளியேறும் தன்மையுடையது. இதனால் செடிகளுக்கு ஊட்டச்சத்தானது சீரான முறையில் கிடைக்கும். மாட்டு எலும்பை உபயோகிப்பதால் சிலர் இதை தவிர்க்க நினைக்கலாம். மண்ணில் இயற்கையாகவே உயிரினங்களின் எச்சம் கலந்துள்ளது, அதுவே செடிகளின் ஊட்டச்சத்து ஆதாரம் என்பதை நினைவில் கொள்க.

எலும்பு உணவின் மூலம் செடிகளுக்கு விசர் மாட்டு நோய் பரவும் என்று ஓர் கருத்து உள்ளது. இது அறவே உண்மையற்றது, ஆதாரமற்றது. இந்நோய் பரப்பும் கிருமியானது மற்ற கால்நடைகளை தாக்குவதென்பதே அரிதானது. மேலும் இதை தயாரிக்கும் முறை மிகவும் சீரானது, குறுக்கு வழிகளுக்கு சாத்தியமற்றது. கவுச்சி வாடை போக பலமுறை எலும்பை கொதிக்கும் நீரில் ஊறவைத்து கழுவுவார்கள். எலும்பை இலகுவாக பொடியாக்கிட நன்கு சுடவைப்பார்கள். இம்முறையில் எந்தொரு கிருமியும் பிழைக்காது.  ஆகவே இந்நோய் பரவ வாய்ப்பில்லை அறிவியல் ரீதியான ஆதாரமும் இல்லை.

வெள்ளை சுண்ணாம்பு (நறுமணம் சேர்க்காதது): சுண்ணாம்பு சத்து செடிகளுக்கு மிகவும் அவசியம், பூக்காத, பூக்கள் உதிரும் அல்லது பூத்தும் காய் கனிகள் உருவாகாத செடிகளுக்கு ஓர் சிட்டிகை அளவு வெண்சுண்ணாம்பை ஒரு முகத்தல் அளவை (லிட்டர்) நீரில் கலந்து கொடுத்து வர நல்ல பலன் கிடைக்கும்.

கலப்படமற்ற புகையிலை: உடலுக்கு தீங்கு என்று நாம் வெறுக்கும் புகையிலை சிறந்ததோர் மருத்துவகுணமுடையது.  பொதுவாக மிளகாய் மற்றும் கத்திரி செடிகளில் ஏற்படும் இலைசுருட்டல் நோயை குணப்படுத்தவல்லது.

இதனால் புகையிலை தேமல் நோய் (புகையிலை மொசைக் வைரஸ்) என்ற நோய் ஏற்படும் என்று ஓர் கருத்து உள்ளது. இது தவறாக கருதப்பட்டுள்ளது. புகையிலை தேமல் நோய் புகையிலையை உபயோகிப்பதால் வருவதில்லை. புகையிலை மற்றும் அது சார்ந்த மரபுச்செடிகளையே இது அதிகம் தாக்குகின்றது. ஆதலால் இப்பெயர். அவ்வாறாக தாக்கப்படும் செடிகளில் இருந்து வெள்ளை ஈக்கள் மற்ற செடிகளில் அமரும்பொழுது இந்நோய் மற்ற செடிகளையும் தாக்குகின்றது. இந்நோய் பரப்பும் கிருமியானது 40 நுற்றளவைக்கும் (டிகிரி செல்சியஸ்) குறைவாக உள்ள பகுதிகளில் பிழைக்கும் தன்மையுடையது.

இதை நீங்களும் முயன்று பார்க்கலாம் (எனக்கு எந்த ஓர் பக்கவிளைவும் இதுவரை ஏற்பட்டதில்லை). தூய புகையிலையை (நறுமணம் மற்றும் எந்த ஒரு கலப்படமும் இல்லாத) இரவு, நீரில் ஊறவிட்டு, வடித்து பின்னர் 1:4 என்ற விகிதத்தில் கொதிநீருடன் கலந்து ஆறவைத்து பின்னர் இலையூட்டமாக செடிகளுக்கு வழங்கவும். மண்ணில் இடுவதை அறவே தவிர்க்கவும்.

மண் எரியகி (ராக் பாஸ்பேட்): மணி எரியகி என்பது என்பது வண்டலாகப் படிந்துருவான ஓர் கனியக்கூறுகலந்த மண்கலவைப்பகுதி. இதில் எரியகி தரும் கனிமங்கள் நிறைந்துள்ளது. இது இயற்கையானது. செடிகளுக்கு தேவையான எரியம் மற்றும் சுண்ணாம்பு சத்துக்களை மெல்ல வழங்கவல்லது.

நீங்கள் மண்ணை சரியானமுறையில் வளமடையச்செய்தால் கீழ்கணட நுண்ணுயிர்களின் ஆய்வக நிரவுகோண் தேவைப்படாது. நீங்கள் இவைகளை உபயோகிக்க நினைத்தால் நாட்படாததாக பார்த்து வாங்கவும் உடனடியாக உபயோகிக்கவும், நாட்பட்டால் இவற்றின் வீரியம் குறையும்.

டிரைக்கோடெர்மா விரிடி (டி விரிடி): இயற்கையிலே மண்ணில் இருக்கக்கூடிய ஓர் பூஞ்சணம். விதை மற்றும் மண்ணில் ஏற்படும் பல நோய்க்கிருமிகளை தடுக்கவல்லது. மண்ணை சரியானமுறையில் தயார் செய்தால் இதை தனியாக இடும் தேவையிருக்காது.

சூடோமோனாஸ்: இது வளமான மண்ணில், நீரில், செடிகளில் இயற்கையாக இருக்கும் பாதுகாப்பான மக்குன்னி. இது விதை, மற்றும் வேர்களை காளான் தொற்றில் இருந்து பாதுகாக்கின்றது. இது எவ்வாறு வேலைசெய்கின்றது என்று பல கருத்துகள் உள்ளது.

அசோஸ்பியரிலியம் மற்றும் ரைசோபியம்: மண்ணிலே இருக்கக்கூடிய இருவேறு நுண்ணுயிர்கள். மண்ணில் ஏற்படும் தழைச்சத்து குறைபாட்டை சீர்படுத்தும்.

தங்கள் பொன்னான நேரத்திற்கு நன்றி. சொற்பிழை, பொருட்பிழை,, கருத்துப்பிழை இருப்பின் தெரியப்படுத்தவும். திருத்திக்கொள்கின்றேன், நான் என்றும் மாணவனே 🙂 . மண் வளப்படுத்தும் முறை பற்றி பதிவிடுகின்றேன். மறக்காமல் தங்கள் கருத்தை பதிவிடவும்.

ENGLISH VERSION

Natural products to use in your organic garden – Part 6

Click here to read the Tamil Version

Bone meal: Bone meal is nothing but finely and coarsely ground slaughter-house waste. Mostly it’s the bones of cow/ bulls that are slaughtered for meat. It is highly rich in phosphorus and other nutrients. It is a slow release fertilizer. Few may avoid the use of this fertilizer when they hear the word cow. But remember the soil naturally contains such waste which is the nutrient supplier to the plants.

There is also a myth that bone meal supplement may cause mad cow disease. First this is not true and is source less. Scientifically the disease seldom affects other species. The preparation method is strict and cannot be bypassed. To remove the smell the bones are soaked and washed in boiling water. Then to grind it easily they need to dry and heat the bones only then they can get the coarse powder. No pathogen would ever survive such conditions. Hence it is completely safe.

White unscented Chunna aka slaked lime, pickling lime (Calcium Hydroxide): Calcium is very important for plants. Mix a pinch of chunna to a litter of water and supply to plants that are not flowering or flowering but flowers dropping or flowering but not fruiting even after pollination. Gives better results.

Raw Tobacco: The tobacco which we hate as a killer is indeed a medicinal plant. It cures the leaf curl disease in chillies and brinjal. There is a misconception that Tobacco Mosaic Virus(TMV) is caused by usage of tobacco on plants. It is a misunderstood version.

It is true that TMV is a terrible disease that can affect most plants and survives better in temperature lesser than 40 degree Celsius (104 degree Fahrenheit). Hence it is a nightmare in garden specifically the green houses. However we need to understand that TMV primarily affects tobacco plants or its genus. Hence the name. The white flies that sits on the affected plants carries the virus to other plants. So you can safely try this option (It always works safely for me without any side effects). The fresh tobacco need to be soaked in water over night and the liquid needs to be diluted in 1:4 ratio with hot water, cooled and then supplied to plants as foliar spray. Avoid feeding it to soil.

Rock phosphate: Rock phosphate is a naturally occurring sedimentary rock which is rich in phosphate bearing minerals and calcium. It is used as a slow release fertilizer for plants.

If you prepare your soil properly. You would not need the lab versions of the below supplements. However you need to ensure that you buy the fresh versions of these and use them at the earliest as they may become ineffective after a period.

Trichoderma viride (T Viride):  T Viride is a naturally occurring antagonistic fungal organism present in the soil. It is used for seed and soil treatment for suppression of various diseases caused by fungal pathogens. If you prepare your soil properly there is no need for this supplement.

Pseudomanas fluorescens (P fluorescens):  Pseudomanas is common non-pathogenic saprophyte that colonises in soil, water and on plant surfaces. It suppresses plant diseases by protecting the seeds and roots from fungal infections. There are various theories on how Pseudomanas works.

Azospirillum, Rhizobium: Both are 2 different bacteria that fix nitrogen in soil.

Thank you for your time. Kindly let me know if you find spelling, grammatical or knowledge based mistakes. Will rectify same I am always a student 🙂 . My next post will be on soil preparation. Do ensure to write your valuable comments.

 
இப்பதிவை பகிரவும் (Share this page):
Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *