Know the products – Part 3(பகுதி 3)

Print Friendly, PDF & Email

Click here to jump to English version

தமிழ் பதிவு படித்திட கீழே தொடரவும்

இயற்கை வேளாண்மைக்கு தேவையான பொருட்கள்  – பகுதி 3

 

தொழு உரம்: தொழுஉரமானது கால்நடைகளிலிருந்து பெறப்படும் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படுகின்றது. பொதுவாக மாட்டின் சாணம், மூத்திரம், வைக்கோல் மற்றும் இதர தொழுவத்தின் இயற்கை கழிவுகளை சேர்த்து தயாரிக்கப்படுகின்றது. இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகம். மண்வளத்தை அதிகப்படுத்துகின்றது. மாட்டின் சாணத்துடன் மாட்டு மூத்திரமும் இணையும்பொது சமஅளவிலான ஊட்டச்சத்துக்கள் பயிர்களுக்கு கிடைக்கின்றன. அகவளர்ச்சியற்ற உரங்களில் உள்ளதைப்போன்று சாம்பரம் (பொட்டாசியம்) மற்றும் எரியம் (பாஸ்பரஸ்) இதில் உள்ளது.

ஆட்டு எரு: ஆட்டு எருவில் மாட்டு எருவில் உள்ளதைப் போல் 2 மடங்கு தழைச்சத்தும், சாம்பல்சத்தும் உள்ளது. சரியான முறையில் வளர்க்கப்படும் ஆட்டு எருவில் களைகள் தழைக்காது மேலும் அவற்றில்  60லிருந்து 70 சதம் தண்ணீர் சத்தும், 2 சதம் தழைச் சத்தும், 0.4 சதம் மணிச் சத்தும், 1.7 சதம் சாம்பல் சத்தும் இருக்கும். ஆட்டின் சிறுநீரில் தழைச் சத்தின் அளவு அதிகமாகவும் புழுக்கையில் நுண்ணூட்டச்சத்துக்களும் தாது உப்புக்களும் உள்ளன. ஆட்டு எரு நாற்றமடிக்காது மாட்டு எரு மற்றும் குதிரை எரு போல் பூச்சிகளை ஈர்க்காது.

குதிரை எரு: மாட்டு எரு போன்றது தான் குதிரை எருவும். நாட்படாத எரு செடிகளின் வேர்களை பொசுக்கிவிடும் வீரியம் கொண்டது, மேலும் இதில் களைகள் அதிகம் இருக்கும்.. ஆதலால் நாட்பட்ட அல்லது நன்கு மக்கவிடப்பட்ட குதிரை எருவை உபயோகிக்கவேண்டும்.

காற்று கலப்பு உரம்: காற்றில் உள்ள நுண்ணுயிர்களை பயன்படுத்தி நம் விட்டு சமையலறையின் சமைக்காத செடிக்கழிவுகள், புளித்தமோர், முட்டைத்தோல், காய்ந்த இலைகள், கொட்டைவடிகட்டி தூள், சிறிது சாணம் ஆகியவற்றை கலந்து நமது வீட்டிலேயே மக்க வைக்கும் செலவில்லா உரம் தயாரிக்கும் மீள் சுழற்சி முறையே இது. இவ்வாறான உரம் தயாரிக்க ல் இருந் நாட்கள் ஆகும். வாடையற்றது, செலவு இல்லாதது, இயற்கையானது.

பயன்படுத்திய கொட்டை வடிகட்டி தூள் (கொ வ தூ): கொ வ தூவானது அதீத தழைச்சத்தை கொண்டுள்ளது. கார அமில விகிதத்தில்  அமிலத்தன்மை பக்கம் சார்ந்துள்ளது. பயன்படுத்தாத கொ வ தூவில் உள்ள  மரவுப்புச் சத்து (கபேன்) மிகவும் வீரியம் உள்ளது ஆகவே பன்படுத்திய கொ வ தூ உபயோகிப்பது நன்று. இதை நேரடியாக மண்ணில் இடலாம். அமிலத்தன்மையை விரும்பும் செடிகள் இதை ஏற்கும் ஆயினும் இதன் முழுப்பலனான தழைச்சத்தூட்டம் முழுமையாக கிட்டாது. ஆகவே இதை உரத்தயாரிப்பில் சரி விகிதத்தில் இட்டு பயன்படுத்துவது தழைச்சத்து ஊட்டத்தை செம்மைப்படுத்தும்.

சில தோட்ட ஆர்வலர்கள் இதை நேரடியாக மண்ணில் இடும்பொழுது இளையட்டை, நத்தை போன்ற செடிகளுக்கு தீங்கு விளைவிக்குக்கும் உயிரினங்கள் அண்டுவதில்லை, பூனைகள் நெருங்குவதில்லை என்று கூறுகின்றனர். எனக்கு அவ்வாறான அனுபவங்கள் இல்லை.

பயன்படுத்திய தேனீர் இலை மற்றும் தேனீர் பைகள்: கோட்டை வடிகட்டி தூள் போன்றதுதான் இதுவும். அமிலத்தன்மை சிறிதே அதிகம். ஆதலால் உபயோகித்த தூளையோ அல்லது மக்கும் உரத்துடன் கலந்தோ பண்படுத்துதல் நலம் பயக்கும்.

இதில் ஏரியம் (பொட்டாசியம்) நிறைந்துள்ளது. தேநீர் பைகளை இடும்போது அவை மக்கும் தன்மையுடையனவா என்று அறிந்து இடுதல் நல்லது.

ENGLISH VERSION

Natural products to use in your organic garden – Part 3

Click here to read the Tamil Version

Farm Yard Manure (FYM): FYM is the manure prepared from cattle waste. Typically it is prepared by dumping cow dung, cow urine, waste straw and other dairy wastes. It is rich in nutrients. FYM Improves soil fertility. When cow dung and cow urine are mixed, a balanced nutrition is made available to the plants. The availability of Potassium and Phosphorus from FYM is similar to that from inorganic sources

Goat Manure: Goat manure fertilizer can help gardeners produce healthier plants and crop yields. Goats not only produce neater pelletized droppings, but their manure doesn’t typically attract insects or burn plants as does manure from cows or horses. Adding to it the goat pellets absorb the goat urine as well which is much rich in nutrients. Goat manure is virtually odourless and is beneficial for the soil.

Horse Manure (HM): Just like cow dung manure HM is the undigested residue of plant matter from the Horse. Fresh HM should not be used on plants to prevent the possibility of burning their roots. Well-aged manure or well dried manure over a season can be applied without the worry of burning. While it may be more nutritional, horse manure may also contain more weed seeds. For this reason, it is usually better to use composted horse manure in the garden.

Aerobic compost: Composting by air. The compost obtained by using micro-organisms living in the composting material (biomass) such as kitchen uncooked plant waste, sour butter milk, egg shells, dry leaves, used coffee grounds, small amount of cow manure etc. It is odourless, cost effective method of recycling kitchen waste. It is 100% organic.

Used coffee grounds: Coffee grounds are very rich in nitrogen and are on the higher side of acidic part with a PH level. Adding coffee grounds directly to soil does not help in any way the release of nitrogen. Indeed it turns the soil acidic hence it is important that you add it to your compost bin or decompose it at least for a week before applying it to soil. Adding it directly to plants loving acidic environment helps to certain extent. Coffee grounds is considered as the green part of the compost and hence adding adequate brown matter along with the coffee grounds in the compost tend to enrich the nitrogen content.

Coffee ground application to soil is claimed in some cases to deter slugs, snails and even cats. But these are personal experiences documented by some gardeners and I recommend you try it yourself but don’t just rely on this alone.

Used tea leaves/ tea bags: Used tea leaves/ bags contains the similar compounds found in used coffee grounds. It is also slightly in the acidic part. It’s better to use used dried tea leaves or mix it with compost. It is rich in potassium. While applying along with the tea bags ensure the bags are bio degradable.

Speak to you soon in yet another post Gardener’s. Until than Happy Gardening.

 
இப்பதிவை பகிரவும் (Share this page):
Share

3 Replies to “Know the products – Part 3(பகுதி 3)”

  1. That’s a lovely list of neatly compiled points.
    May I suggest that u add details of banana tea and compost tea…An essential add ons to plant in flowering stage…
    May be u have planned to include it in your other write up

     
  2. தமிழ் பதிவு மிகவும் அருமை.. வலைப்பூக்கள் தொடர வாழ்த்துக்கள்.. !

     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *